உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காதல் தகராறில் முன்விரோதம் வாலிபரை வெட்டிய மூவர் கைது

காதல் தகராறில் முன்விரோதம் வாலிபரை வெட்டிய மூவர் கைது

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த பெரிய செங்குன்றம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 22. நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், மணிகண்டன் தலையில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர்.இதுகுறித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டனை வெட்டி விட்டு தப்பிய நபர்கள், மெல்ரோசாபுரம் மலைமேடு பகுதியை சேர்ந்த சுரேஷ், 22, ஸ்ரீகாந்த், 19, நவீன், 20, என தெரிந்தது.மணிகண்டனுக்கும், ஸ்ரீகாந்த்துக்கும் இடையே, அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலிப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்ததும், ஸ்ரீகாந்த் தன் நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனை வெட்டியதும், விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ