உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்லுாரி மாணவன் மீது தாக்குதல்; சிறுவன் உட்பட நால்வர் கைது

கல்லுாரி மாணவன் மீது தாக்குதல்; சிறுவன் உட்பட நால்வர் கைது

மறைமலை நகர் : காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ் என்பவர் மகன் சஞ்சய், 18. பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த 12ம் தேதி, பல்கலைக்கழக வளாகத்தில், கேன்டீன் அருகில் சஞ்சய்யை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக தாக்கி, ரீல்ஸ் போட்டு காலேஜில் ஹீரோவாக பார்க்கிறாயா என கூறி, தாங்கள் அணிந்து இருந்த இரும்பு காப்பு வாயிலாக சஞ்சய்யின் முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.பலத்த காயமடைந்த சஞ்சய், படப்பை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இது குறித்து, மருத்துவமனை ஊழியர்கள் அளித்த தகவலின்படி, மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதில், சஞ்சய்யை தாக்கியது அதே கல்லுாரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயிலும் ஹரி, 18, மற்றும் அவரது நண்பர்களான தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி., இரண்டாம் ஆண்டு பயிலும் சந்தோஷ், 18, ரமேஷ், 18, மற்றும் 17 வயது சிறுவன் என, தெரிய வந்தது.அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கல்லுாரியில் தான் கிங் என பதிவிட்டதால் கோபமடைந்த ஹரி, தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி