வரும் ஞாயிறுகளில் பீச் - செங்கல்பட்டு 10 ரயில்கள் ரத்து
சென்னை, கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், நாளை மறுநாள் முதல், ஞாயிற்றுக்கிழமைகளில், 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு தடத்தில், ரயில் பாதுகாப்பு இயக்கத்தை கருத்தில் வைத்து, கடந்த மாதத்தில், 14 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் நாளை மறுநாள் முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ரயில்களின் சேவை ரத்து செய்து, புதிய கால அட்டவணையை மாற்றியமைத்துள்ளது. இது, வரும் 8ம் தேதி முதல் அமலாகிறது. மறு உத்தரவு வரும் வரை, இந்த மின்சார ரயில்கள் ரத்து தொடரும்.கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தற்போது 200 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.