உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கச்சூர் கோவில் தேர் நிறுத்தம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை

திருக்கச்சூர் கோவில் தேர் நிறுத்தம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில் பழமையான அஞ்சனாட்சி தாயார் உடனுறை கச்சபேசுவரர் கோவில் உள்ளது.இது சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கோவில். இந்த கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோவில், சித்திரை மாத பிரம்மோற்சவம், தேரோட்டம் விமரிசையாக நடத்தப்படும். 33 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தேரோட்டம், புதிதாக தேர் செய்யப்பட்டு, 2015ம் ஆண்டு முதல் மீண்டும் நடந்து வந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவில் திருப்பணிகள் நடந்து வந்ததால், தேரோட்டம் நடைபெறவில்லை. இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த 21ம் தேதி நடைபெற்றது.தேரோட்டம் நடைபெறாததால், தேர் கோவிலுக்கு எதிரில் கிழக்கு மாடவீதியில் நிறுத்தப்பட்டு, இரும்பு தகடுகள் கொண்டு மூடப்பட்டு இருந்தது.தேரின் மேல்பகுதி முறையாக மூடப்படாததால், மழை, வெயிலில் வீணாகி வந்தது. இதையடுத்து, தேர் நனையாமல் இருக்க, கான்கிரீட் சுவர்கள் கொண்டு கட்டடம் கட்ட வேண்டும் என, நீண்ட நாட்களாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 23 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கான பூமி பூஜை, தேரடி பகுதியில் நேற்று நடந்தது.இதில், செயல் அலுவலர் வெங்கடேசன், மேனேஜர் தமிழ்செல்வன் உள்ளிட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி