உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தனியார் கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தனியார் கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் அண்ணா உயிரியல் பூங்கா அருகில் உள்ள தனியார் கல்லுாரிக்கு, மர்ம நபர் ஒருவர் போன் செய்து, கல்லூரி வளாகத்திற்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.இது தொடர்பாக, கல்லுாரி டெலிபோன் ஆபரேட்டர், கல்லுாரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். கல்லுாரி நிர்வாகம் அளித்த புகாரின்படி, கிளாம்பாக்கம் போலீசார் தாம்பரத்தில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் கல்லுாரி வளாகம் வந்தனர்.கல்லுாரி வளாகத்திற்குள், அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.அதைத் தொடர்ந்து, கல்லுாரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, போன் வாயிலாக மிரட்டல் விடுத்த நபர் பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ