உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பக் கோப்பை கால்பந்து: ஒய்.எம்.சி.ஏ., அணி சாம்பியன்

பக் கோப்பை கால்பந்து: ஒய்.எம்.சி.ஏ., அணி சாம்பியன்

சென்னை : நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி சார்பில், அதன் நிறுவனர் ஹாரி குரோ பக்கை நினைவுகூரும் வகையில், 'பக்' கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.இதில், வாலிபால், தடகளம், பேட்மின்டன், பால் பேட்மின்டன், குத்துச்சண்டை உட்பட 18போட்டிகள் நடக்கின்றன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 5,000 மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.ஆடவருக்கான கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில், ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி அணி, 3 - 2 என்ற கோல் கணக்கில் நியூ கல்லுாரியை தோற்கடித்தது. மற்றொருஅரையிறுதியில், லயோலா அணி, 5 - 4 என்ற கணக்கில்நசரத் கல்லுாரியைவீழ்த்தியது.நேற்று காலை நடந்த இறுதிப்போட்டியில், ஒய்.எம்.சி.ஏ., மற்றும் லயோலா அணிகள் மோதின. பலம் வாய்ந்த இரு அணிகளும், போட்டியின் துவக்கத்தில் இருந்தே சமநிலையில் வந்தனர். முடிவில், 7 - 6 என்ற கணக்கில் ஒய்.எம்.சி.ஏ.,கல்லுாரி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது. மற்றபோட்டிகள் தொடர்ந்துநடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்