உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பஸ்கள் நிற்காமல் சென்றால் உடனடி புகார் செய்ய அழைப்பு

பஸ்கள் நிற்காமல் சென்றால் உடனடி புகார் செய்ய அழைப்பு

சென்னை: நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகள் குறித்து, பயணியர் உடனடியாக புகாரளிக்க, மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 630-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், 2,800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இவ்வாறு பேருந்துகளில் பயணிப்போரை நிறுத்தங்களில் முறையாக ஏற்றி, இறக்க வேண்டும் என ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன.எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நேரிடும்போது, உடனடியாக 149 என்னும் புகார் எண்ணில் பயணியர் புகாரளிக்க மாநகர போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் தரப்பில் விழிப்புணர்வு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.அதில், 'அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மாநகர பேருந்துகள் நிற்காமல் சென்றால், பேருந்து வழித்தட எண், பதிவு எண், பேருந்து எங்கிருந்து எங்கு சென்றது, நேரம், எந்த நிறுத்தத்தில் நிற்கவில்லை என்ற விபரத்தை 149 என்னும் எண்ணில் பயணியர் உடனடியாக புகாரளிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை