உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குற்றங்களை தடுக்க பெரும்பாக்கத்தில் சிசிடிவி

குற்றங்களை தடுக்க பெரும்பாக்கத்தில் சிசிடிவி

அச்சிறுபாக்கம்:மதுராந்தகத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரம், பெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கூடப்பாக்கம், பெரும்பாக்கம், தண்டலம், வைப்பனைபுதுார் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.இந்த சாலையை, சுற்றுப்புறங்களில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.உத்திரமேரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள், விபத்து ஏற்படுத்திவிட்டு, எல்.எண்டத்துார் வழியாக மேல்மருவத்துார் சாலையில் தப்பி செல்கின்றன. அதுமட்டுமின்றி, இப்பகுதி குடியிருப்புகளில் நகை திருட்டு, கால்நடைகள் திருட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளன. அதனால், விபத்து ஏற்படுத்தும் வாகனங்கள் மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை அடையாளம் காண, அப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களில், பெரும்பாக்கம் ஊராட்சி தலைவர் மனோகர் ஏற்பாட்டில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.இந்த கேமராக்களின் பதிவுகளை, ஊராட்சி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, ஊராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி