உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல் குவாரி பள்ளத்தில் மூழ்கி சட்டமங்கலம் பிளம்பர் பலி

கல் குவாரி பள்ளத்தில் மூழ்கி சட்டமங்கலம் பிளம்பர் பலி

மறைமலை நகர் : மறைமலை நகர் அடுத்த சட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 38. பிளம்பர் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் மாலை, ஆப்பூர் அடுத்த தாசரிகுன்னத்துார் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளித்த போது செந்தில்குமார், திடீரென தண்ணீரில் மூழ்கினார். அச்சமடைந்த உறவினர்கள், பாலுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த பாலுார் போலீசார், கல்குவாரி குட்டையில் இறங்கி தேடினர். இரவு நேரம் என்பதால், போதிய வெளிச்சம் இல்லாமல், செந்தில்குமார் உடலை தேடுவதில் தடை ஏற்பட்டது.அதனால், நேற்று காலை 8:00 மணிக்கு மீண்டும் தேடும் பணி துவங்கியது. ஒன்பது மணி நேர தேடுதலுக்கு பின், மாலை 4:00 மணிக்கு செந்தில்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பாலுார் போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை