உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சித்திரை விழா கடை உரிமம் ரூ.3.74 லட்சத்திற்கு ஏலம்

சித்திரை விழா கடை உரிமம் ரூ.3.74 லட்சத்திற்கு ஏலம்

திருக்கழுக்குன்றம்:ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேத கிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், சித்திரை பெருவிழா, ஏப்ரல் 14ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது.இதை முன்னிட்டு, தினமும் காலை, இரவு, உற்சவம் நடக்கும். திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், இங்கு வழிபடுவர்.உற்சவத்திற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, கோவில்வளாகத்தில் தற்காலிக கடைகள் வைத்துக் கொள்ள கோவில் நிர்வாகம் அனுமதிக்கும்.அவற்றுக்கு கட்டணம் வசூலிக்க, பொது ஏலம் நடத்தி,உரிமம் வழங்கப்படும்.நேற்று முன்தினம், ஆய்வாளர் பாஸ்கரன், செயல் அலுவலர் பிரியா மேற்பார்வையில், பொது ஏலம்நடத்தப்பட்டது.முன்வைப்பு தொகை செலுத்திய 11 பேர் பங்கேற்றனர். நிர்வாகம், ஏலம் கேட்பு ஆரம்ப தொகையாக, முதலில் 3.50 லட்சம் ரூபாய்நிர்ணயித்தது.இத்தொகையை குறைக்குமாறு ஏலதாரர்கள் வலியுறுத்தியதால், 3 லட்சம் ரூபாய்க்கு குறைக்கப்பட்டது. பழனி என்பவர், அதிகபட்ச தொகையாக, 3.74 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கோரியதால், அவருக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ