உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சொக்கப்பனை விநாயகர் கோவில் ரூ.8 லட்சம் மதிப்பில் புனரமைப்பு

சொக்கப்பனை விநாயகர் கோவில் ரூ.8 லட்சம் மதிப்பில் புனரமைப்பு

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது.இக்கோவிலின் குழு கோவிலாக, மலையடிவார வீதி மற்றும் சன்னிதி வீதிகள் சந்திப்பில், பழமையான சொக்கப்பனை விநாயகர் கோவில்உள்ளது.கார்த்திகை தீபத்தின்போது, இக்கோவில் முன், சொக்கப்பனை ஏற்றப்படுவதால், இந்த விநாயகருக்கு சொக்கப்பனை விநாயகர் என பெயர் வந்தது.சுவாமியின் வாகனமாக யானை உள்ளது.இக்கோவில், நீண்ட காலமாக பராமரிப்பின்றி சீரழிந்தது. நன்கொடையாளர் வாயிலாக புனரமைக்க, வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகம்முயன்றும், சில காரணங்களால் புனரமைக்க இயலவில்லை.எனவே, அறநிலையத்துறை நிர்வாகம் சார்பில் புதுப்பிக்கப்படும் என, கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.தற்போது, சன்னிதி, விமான கோபுரம், சுவர் உள்ளிட்டவை புனரமைக்கப்படுகின்றன.வேதகிரீஸ்வரர் கோவில் நிதியில் இருந்து, 8 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, தற்போது திருப்பணிகள் நடந்து வருவதாக, கோவில் செயல் அலுவலர் புவியரசுதெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ