உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை கோனேரி பகுதியை மேம்படுத்த கலெக்டர் உத்தரவு

மாமல்லை கோனேரி பகுதியை மேம்படுத்த கலெக்டர் உத்தரவு

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பழங்கால கோனேரி உள்ளது. பொதுப்பணித்துறையின்கீழ் உள்ள இந்த ஏரி, நீண்டகாலம் துார்வாரி பராமரிக்கப்படாமல் சீரழிந்தது.கடந்த 2019ல், பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்பின்போது, 'இ.எப்.ஐ.,' என்ற இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை வாயிலாக, ஏரி துார்வாரி பராமரிக்கப்பட்டது.இயற்கை சுற்றுச்சூழலுடன், பறவைகள், நீர்வாழ்வன புகலிடமாக மேம்படுத்தவும், அறக்கட்டளை முடிவெடுத்தது. ஆனால், இடையூறுகளால் மேம்பாடின்றி முடங்கி, மீண்டும் சீரழிந்தது.தொல்லியல் துறையின் குடைவரை சிற்ப வளாகத்தை ஒட்டி ஏரி உள்ள நிலையில், அதை சுற்றுலாவிற்கேற்ப மேம்படுத்துவது குறித்து, ஏப்., 28ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் கலெக்டர் அருண்ராஜ், அறக்கட்டளை நிர்வாகி அருண் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோருடன் ஏரியை பார்வையிட்டு, மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.அப்போது, நீர்வாழ்வன, பறவைகள் முகாமிடும் புகலிட அமைப்புடன் மேம்படுத்தி, பயணியர், சிறுவர்கள், அவற்றை பற்றி அறியும் வகையில் மேம்படுத்தலாம் என, அருண் கிருஷ்ணமூர்த்தி விளக்கினார். ஏரி பகுதியை வரையறுத்து தெரிவிக்கவும், கேட்டுக் கொண்டார்.ஏரி பகுதியை அளவிட்டு, அறக்கட்டளை நிர்வாகிகளிடம் தெரிவிக்குமாறும், அங்குள்ள கங்கையம்மன் கோவில் வழிபாட்டிற்கு இடையூறின்றி செயல்படுத்தவும், கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி