உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சர்வதேச காடுகள் தினம் கலெக்டர் மரக்கன்று நடவு

சர்வதேச காடுகள் தினம் கலெக்டர் மரக்கன்று நடவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வனச்சரகம் மற்றும் வனக்கோட்டம் சார்பில், சர்வதேச காடுகள் தினத்தையொட்டி, கலெக்டர் அலுவலக வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று, மரக்கன்று நட்டு, பணியை துவக்கி வைத்தார்.கூடுதல் கலெக்டர் அனாமிகா, திட்ட இயக்குனர் மணி, வனக்குழு தலைவர் திருமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதேபோல், செங்கல்பட்டு சப் -- கலெக்டர் அலுவலக வளாகத்தில், மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், சப்- - கலெக்டர் நாராயணசர்மா, மாவட்ட வன அலுவலர் ரவிமீனா ஆகியோர் பங்கேற்று, மரக்கன்றுகள் நட்டனர். இதில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ