உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இறைச்சிக்காக பசுவை திருடி கொன்றோர் மீது புகார்

இறைச்சிக்காக பசுவை திருடி கொன்றோர் மீது புகார்

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த இள்ளலுாரை சேர்ந்தவர் சொக்கலிங்கம், 55. இவர், நேற்று காலை வீட்டில் கட்டி வைத்திருந்த பசு மாடு மாயமானதை கண்டு அதிச்சியடைந்தார்.குடும்பத்தினர் பல இடங்களில் தேடியபோது, வனப்பகுதியில் மாட்டின் தலை, குடல், தோல் ஆகியவை மட்டும் கிடப்பதை கண்டனர்.நள்ளிரவில் மாடு திருடியவர்கள், அதை கொன்று, இறைச்சியை மட்டும் எடுத்துச் சென்றது தெரியவந்தது.இது தொடர்பாக, திருப்போரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி