உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சம்பளம் தராமல் அலைக்கழிப்பு நிறுவனம் மீது போலீசில் புகார்

சம்பளம் தராமல் அலைக்கழிப்பு நிறுவனம் மீது போலீசில் புகார்

திருப்போரூர், மூன்று மாதங்களாக சம்பளம் தராமல் ஏமாற்றி வருவதாக, தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழியர்கள் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.திருப்போரூர் அடுத்த மாம்பாக்கத்தில், தனியார் ஆடை தைக்கும் நிறுவனம், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இயங்கி வந்தது. இங்கு, மாம்பாக்கம்,கண்டிகை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். சில நாட்களுக்கு முன், இந்நிறுவனம் மூடப்பட்டது.இந்நிலையில், அங்கு பணிபுரிந்த 45க்கும் மேற்பட்ட ஊழியர்கள், மூன்று மாதங்களாக சம்பளம் தராமல் ஏமாற்றி வருவதாக, நிறுவனத்தின் மீது நேற்று முன்தினம் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரை பெற்ற போலீசார், சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளரை வரவழைத்து விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின், சில நாட்களில் இரு தவணையாக சம்பளத்தை கொடுத்துவிடுவதாக, நிறுவனத்தின் உரிமையாளர் போலீசாரிடம் உறுதியளித்தார்.இதை ஏற்று, அனைத்து ஊழியர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி