உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சதித்திட்டம் தீட்டிய ரவுடிகள் கைது நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

சதித்திட்டம் தீட்டிய ரவுடிகள் கைது நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

செங்கல்பட்டு : செங்கல்பட்டைச் சேர்ந்த ரவுடிகள் அன்வர் உசேன், 35, விஜி, 34; இருவரும் நண்பர்கள். இவர்கள் மீது செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் இருவரையும் தேடி வந்தனர். நேற்று இருவரும் செங்கல்பட்டு கொள்வாய் ஏரி பழைய படகு குழாம் கட்டடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அப்பகுதியைச் சுற்றிவளைத்த போலீசார், அன்வர் உசேன் மற்றும் விஜியை பிடிக்க முயன்ற போது, தப்பிப்பதற்காக இருவரும் கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்தனர்.இதில், இருவருக்கும் வலது கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து இருவரையும் மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.விசாரணையில், செங்கல்பட்டைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி வந்தது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து, இருவரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் பதுங்கி இருந்த கட்டடத்தை போலீசார் சோதனை செய்ததில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ