உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பழையனுார் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

பழையனுார் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த பழையனுாரில், ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பழையனுார் ஊராட்சி ஒன்றிய அரசு நலப்பள்ளியில், 13 மாணவ - மாணவியர் கல்வி பயின்றுவருகின்றனர்.இங்கு, பள்ளி வளாகத்தை சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், பள்ளி வேலை நாட்களில் கால்நடைகள் உலா வந்தன.இதனை தவிர்க்கும்விதமாக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைதிட்டத்தின் கீழ், 1.50லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 23 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.மேலும், பள்ளியின் பின்புறம் உள்ள தனியார் திறந்தவெளிபகுதியை அளவீடு செய்து,அங்கும் சுற்றுச்சுவர் அமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என,பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை