| ADDED : ஜூன் 07, 2024 12:41 AM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் மையப் பொறுப்பாளர்களுக்கான சமையல் பயிற்சி, நேற்று நடந்தது.செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு ஒன்றி யங்களில் உள்ள 55 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதில், அச்சிறுபாக்கம்ஒன்றியத்தில் எலப்பாக்கம், மோகல்வாடி, மாத்துார், அகிலி, பாப்பநல்லுார், கோழியாளம் மற்றும் தீட்டாளம் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இப்பள்ளிகளில் சமையல் பணி மேற்கொள்ள உள்ள சமையல் பணியாளர்களுக்கான இரண்டு நாள் செய்முறை பயிற்சி, அச்சிறுபாக்கம் வட்டாரவளர்ச்சி அலுவலகவளாகத்தில் நடந்தது.இதில், சமையல் பணியாளர்களுக்கு காலை உணவு தயார் செய்யும் முறைகள், பாத்திரங்களை துாய்மையாக வைத்திருத்தல், சுத்தமான காய்கறிகளை பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு, காலை உணவு தயார் செய்யும் பணி வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்வில், சமையல் பயிற்சியாளர் சுமதி, உதவி திட்ட அலுவலர் பாஸ்கர்,அச்சிறுபாக்கம் வட்டார மேலாளர் தானப்பன்மற்றும் சமையல் பணியாளர்கள் பங்கேற்றனர்.