உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மிருதங்க கலைஞருக்கு வெட்டு பாலுாரில் மூவருக்கு வலை

மிருதங்க கலைஞருக்கு வெட்டு பாலுாரில் மூவருக்கு வலை

மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த பாலுார் கிராமத்தை சேர்ந்தவர் சுனில், 28. மிருதங்க இசைக்கலைஞர்.இவர், நேற்று முன்தினம் இரவு, பாலுாரில் உள்ள முருகன் கோவிலில் நடந்த இசை கச்சேரியில் பங்கேற்று, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், சுனிலை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.அக்கம்பக்கத்தினர் சுனிலை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சுனில் வெட்டப்பட்டதை அறிந்த அவரதுஉறவினர்கள் 20க்கும்மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு, பாலுார் காவல் நிலையத்தை சூழ்ந்து,குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வேண் டும் எனக் கோரி, செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாலுார் போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவர் என உறுதியளித்தையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.இச்சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:இரண்டு மாதங்களுக்கு முன், பாலுார் கணக்குப்பிள்ளை தெருவில், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இருவரை, சுனில் தட்டிக்கேட்டதால்இரு தரப்பினருக்கும் இடையே சண்டை ஏற்பட் டுள்ளது.இந்த முன்விரோதத்தின் அடிப்படையில், சுனில் வெட்டப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி