உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டி.ஏ.பி., உரம் விலையேற்றம் மாற்று உரம் குறித்து ஆலோசனை

டி.ஏ.பி., உரம் விலையேற்றம் மாற்று உரம் குறித்து ஆலோசனை

செங்கல்பட்டு டி.ஏ.பி., உரத்தின் மூலப்பொருட்களின் விலையேற்றத்தால், அதற்கு மாற்றாக, சூப்பர் பாஸ்பேட், என்.பி.கே., காம்பளக்ஸ் உரங்களை பயன்படுத்துமாறு, விவசாயிகளுக்கு கலெக்டர் அருண்ராஜ் ஆலோசனை வழங்கியுள்ளார்.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில், யூரியா 3,748 டன், டி.ஏ.பி., 1,251 டன், பொட்டாஷ் 507 டன், காம்ப்ளக்ஸ் 3,305 டன் ஆகிய உரங்கள் கையிருப்பில் உள்ளன. தற்போது, விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தும் டி.ஏ.பி., உரத்திற்கான மூலப்பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. அதனால், அதிக விலைக்கு விற்பனை யாகும் டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக, சூப்பர்பாஸ்பேட் மற்றும்என்.பி.கே., காம்ப்ளக்ஸ் உரத்தை பயன்படுத்தலாம் என, தமிழக வேளாண் துறை பரிந்துரை செய்துள்ளது.பயிருக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்கள் அனைத்தும், என்.பி.கே., காம்ப்ளக்ஸ் உரத்தில் அடங்கி உள்ளன. இந்த உரத்தை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தி, அதிக லாபம்பெறலாம்.சூப்பர் பாஸ்பேட்உரத்தில், பாஸ்பரஸ், சல்பர்,கால்சியம் போன்ற கூடுதல் சத்துக்கள் கிடைக்கின்றன.இதனை எண்ணெய் வித்து பயிர்களுக்கு பயன்படுத்தும்போது, மகசூல் அதிகரித்து, எண்ணெய் சத்து அளவு அதிகரிக்கிறது.இதனால், சூப்பர் பாஸ்பேட் மற்றும் என்.பி.கே., காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை