உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீடு கட்டுமானம் தாமதம்; நஷ்டஈடு வழங்க உத்தரவு

வீடு கட்டுமானம் தாமதம்; நஷ்டஈடு வழங்க உத்தரவு

சென்னை : தையூரில், 'அக் ஷயா' நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்க, பிரியா ஸ்ரீநிவாசன் என்பவர், 2013ல் ஒப்பந்தம் செய்தார்.இதற்காக, அவர் 33.91 லட்சம் ரூபாய் செலுத்தினார். இது தொடர்பான ஒப்பந்தப்படி, பூமி பூஜை நாளில் இருந்து, 42 மாதங்களுக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால், இதற்கான பணிகளில் தாமதம் ஏற்பட்ட நிலையில், அத்திட்டத்தில் வீடு வாங்குவதில் இருந்து விலகுவதாக பிரியா ஸ்ரீநிவாசன், கட்டுமான நிறுவனத்துக்கு தெரிவித்தார். இதற்கு கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொள்ளாத நிலையில், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார்.இந்த புகார் அடிப்படையில், ஆணைய உறுப்பினர் சுனில்குமார்தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு: கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்படவில்லை என, மனுதாரர் தெரிவித்துள்ளார். இதற்காக கட்டுமான நிறுவனம் பல்வேறு காரணங்களை தெரிவித்துள்ளது.இருப்பினும், ரியல் எஸ்டேட் சட்டப்படி, ஒருவர் ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் வீடு வாங்குவதில் இருந்து விலகுவதற்கான உரிமை உள்ளது. உரிய காரணங்கள் அடிப்படையில் இப்படி விலகினால், அவர் செலுத்திய தொகையை திருப்பி கொடுக்க வேண்டும்.இதன்படி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம், மனுதாரரிடம் இருந்து வசூலித்த, 33.91 லட்ச ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும். அடுத்த, 30 நாட்களுக்குள் இந்த உத்தரவை கட்டுமான நிறுவனம் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்