உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த சோத்துப்பாக்கம் கிராமத்தில், புல எண்: 157ல் 2.84 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் உள்ளது. இக்குளத்திற்கு சொந்தமான இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வீடு, கடை மற்றும் சுற்றுச்சுவர்கட்டினர்.நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோரி, ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், குளத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டது உறுதியானது.இதைத்தொடர்ந்து, இம்மாதம் 18ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது.நேற்று வருவாய்த் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் இணைந்து, செய்யூர்வட்டாட்சியர் சரவணன் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன்,பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதன் மதிப்பு 1.5 கோடி ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை