மேலும் செய்திகள்
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
2 hour(s) ago
தெருவில் கிடந்த மோதிரம் போலீசில் ஒப்படைத்த மாணவர்
6 hour(s) ago
பிசியோதெரபி மருத்துவ முகாம்
6 hour(s) ago
மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி அலுவலக இரண்டாவது தளத்தில் உள்ள அறையில், தேர்தலுக்கு பயன்படுத்தும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறை சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.நேற்று காலை, அறையில் வைக்கப்பட்டு இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில், செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் அருண்ராஜ் திறந்து வைத்தார். தொடர்ந்து, நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா, தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கரன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
2 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago