உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு மையத்தில் சப் - கலெக்டர் ஆய்வு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு மையத்தில் சப் - கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு : தமிழகம் முழுதும், டி.என்.பி.எஸ்.சி., குரூப் -- 4 பணிக்கான போட்டித்தேர்வு, நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம் பல்லாவரம், தாம்பரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய எட்டு தாலுகாக்களில், 185 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.அதில், தேர்வுக்கு விண்ணப்பித்த 54,325 பேரில், 40,074 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 14,251 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 9:30 மணிக்கு துவங்கிய தேர்வு, 12:45 மணி வரை நடந்தது.ஒரு மையத்திற்கு, தலா ஒரு ஆயுதம் ஏந்திய போலீசார் வீதம், 185 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தை, செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயணசர்மா ஆய்வு செய்தார்.அப்போது, செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை