உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தட்டிக்கேட்டவரை தாக்கிய போதை வாலிபர்கள் கைது

தட்டிக்கேட்டவரை தாக்கிய போதை வாலிபர்கள் கைது

மாமல்லபுரம், மாமல்லபுரம், வெண்புருஷம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 34.சிற்பி. இவரது நண்பர் இளங்கோவன், 36. ஏசி மெக்கானிக்.கடந்த 4ம் தேதி மாலை, வெண்புருஷம் சுடுகாடு பாதையில் சிலர் மது அருந்துவதை கண்டு, இவர்கள் இருவரும் அவர்களை தட்டிக்கேட்டனர்.அப்போது, மது அருந்திய கும்பல், அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளது.இதில் காயமடைந்த மணிகண்டன், இளங்கோவன் இருவரும், மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து, மணிகண்டனின் தந்தை பூமிநாதன், மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து, கொக்கிலமேடு காலனியைச் சேர்ந்த ஷியாம்நாத், 20, விக்கி என்கிற பிரபாகரன், 25, சூர்யா என்கிற ஜெயச்சந்திரன், 20, ஈஸ்வரன், 25, நிக்கேஷ், 20, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்து சிறையில்அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்