உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை - -தாம்பரம் இடையே டவுன் பஸ் இயக்க வலியுறுத்தல்

செங்கை - -தாம்பரம் இடையே டவுன் பஸ் இயக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு - தாம்பரம் வழித்தடத்தில், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம், தடம் எண் டி60, தடம் எண் டி60 எல்.எல்.எஸ்., என, 25க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த தடத்தில், புலிப்பாக்கம், பரனுார், சிங்கபெருமாள்கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேருந்துகள் நின்று சென்றன.இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அத்தியாவசிய பணிக்கு செல்வோர் அதிக அளவில் பயணம் செய்தனர். அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என, அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து, செங்கல்பட்டு - தாம்பரம் தடத்தில் இயக்கப்பட்ட விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக டவுன் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மருத்துவமனைக்கு அத்தியாவசிய பணிக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.தற்போது, செங்கல்பட்டு - தாம்பரம் வழித்தடத்தில், மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள், அரை மணி நேரத்திற்கு ஐந்து பேருந்துகள் ஒரே நேரத்தில் செல்கின்றன.இதில், கூட்ட நெரிசலுடன் பயணம் செய்யும்போது, திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதனால், குறித்த நேரத்தில் பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனை தவிர்க்க, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து நிர்வாகத்தின் கீழ் இயக்கப்பட்ட டி60, டி 60 எல்.எல்.எஸ்., பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ