மேலும் செய்திகள்
சிலாவட்டம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
20 hour(s) ago
கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
20 hour(s) ago
இன்று இனிதாக ... (04.10.2025) செங்கல்பட்டு
03-Oct-2025
செங்கல்பட்டு: செங்கல்பட்டு துாய கொலம்பா அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 27ம் தேதி அரிய மூலிகைகளின் கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன் கண்காட்சியை துவக்கி வைத்தார்.பள்ளியின் தாவரவியல் துறை சார்பில், கேசவர்த்தினி, தவசிகீரை, திப்பிலி, இன்சுலின், எலும்பொட்டி, ஆடாதொடா, நாட்டு வல்லாரை, நாகதாளி, சித்தரத்தை, ஆவாரம்பூ, வெட்டிவேர், கருந்துளசி உள்ளிட்ட, 70க்கும் மேற்பட்ட மூலிகை தாவரங்கள், இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.இதில் இடம்பெற்ற மூலிகை தாவரங்கள் அனைத்தும், ஆசிரியர் களின் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவ - மாணவியரே சேகரித்தனர் என, தாவரவியல் துறை ஆசிரியை பியூலா ஹெப்சிபா தெரிவித்தார்.இந்த கண்காட்சியை, நகரில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும் வந்திருந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பார்வையிட்டு, ஒவ்வொரு மூலிகை தாவரத்தின் பயன் குறித்தும், ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
03-Oct-2025