உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏரிக்கரையில் சாலை அமைக்க வெண்மாலகரத்தில் எதிர்பார்ப்பு

ஏரிக்கரையில் சாலை அமைக்க வெண்மாலகரத்தில் எதிர்பார்ப்பு

சூணாம்பேடு:சூணாம்பேடு அருகே வெண்மாலகரம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயமேஇப்பகுதி மக்களின்பிரதான தொழில்.பெரும்பாலான விவசாயிகள், ஏரிக்கரை பாதை வழியாக, தங்கள் விவசாய நிலத்திற்கு சென்று வருகின்றனர்.அதில், முறையான சாலை வசதி இல்லாததால், மழை காலத்தில் பாதையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.அதனால், அப்பாதையில் சென்றுவர கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.மேலும், டிராக்டர்கள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்கள் சென்று வரவும் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஏரிக்கரை பாதையில் சாலை அமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்