மேலும் செய்திகள்
காஞ்சி - மாமல்லை அரசு பஸ் இயக்கம்
15-Aug-2024
மாமல்லபுரம்:மாமல்லபுரம் - கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் இடையே, கடம்பாடி, மணமை, குன்னத்துார் ஆகிய பகுதிகள் உள்ளன. வெங்கப்பாக்கம் - திருக்கழுக்குன்றம் இடையே, நெய்குப்பி, நரசங்குப்பம், நல்லுார், நத்தம் கரியச்சேரி, முள்ளிகொளத்துார், மங்கலம் ஆகிய பகுதிகள் உள்ளன.திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் இடையே, புலிகுன்றம், புலியூர், எச்சூர், குழிப்பாந்தண்டலம், காரணை, வடகடம்பாடி ஆகிய பகுதிகள் உள்ளன.வெங்கப்பாக்கம் - திருக்கழுக்குன்றம் மற்றும் திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் ஆகிய தடங்களில், அரசு பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் ஆகியவை இயங்குகின்றன.மாமல்லபுரம் - வெங்கப்பாக்கம் தடத்தில், அரசு பேருந்து இல்லை. ஷேர் ஆட்டோக்கள் மட்டும் இயங்குகின்றன. ஒரு தடத்தைச் சேர்ந்தவர்கள், மற்றொரு தட பகுதிக்கு செல்ல, நேரடி பேருந்து வசதியில்லை.உதாரணமாக, மாமல்லபுரம் - வெங்கப்பாக்கம் தட பகுதி பயணியர், வெங்கப்பாக்கம் - திருக்கழுக்குன்றம் தடத்தில் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால், வெங்கப்பாக்கத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்று, அங்கிருந்தே வேறு பேருந்து அல்லது ஷேர் ஆட்டோக்களில் செல்ல வேண்டும்.இதனால் பண விரயம், நேர விரயம் ஏற்படுகிறது. தற்கால போக்குவரத்து முக்கியத்துவம், அவசியம் கருதி, மாமல்லபுரத்திலிருந்து, வெங்கப்பாக்கம், திருக்கழுக்குன்றம் வழியே மீண்டும் மாமல்லபுரம் வரை சர்குலர் பஸ் இயக்கினால், பயணியருக்கு பயன்படும். இப்பகுதியில், கல்பாக்கம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை இயங்கும் நிலையில், இந்த புதிய வழித்தடங்களில், பேருந்து இயக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.
15-Aug-2024