உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியில் ஆற்று மணல் நிரப்ப எதிர்பார்ப்பு

குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியில் ஆற்று மணல் நிரப்ப எதிர்பார்ப்பு

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட நயினார்குப்பம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.நயினார்குப்பம் கிராமம் கழிவெளிப் பகுதிக்கு அருகே உள்ளதால், நிலத்தடி நீரில் சற்று உவர்ப்புத் தன்மை இருக்கும்.இதனால், ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு தொட்டியின் வாயிலாக சுத்திகரிக்கப்படும்.அதன்பின், மோட்டார் வாயிலாக மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு குழாய் வாயிலாக வினியோகம் செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களுக்கு முன், பேரூராட்சி சார்பில் பராமரிப்பு பணிக்காக சுத்திகரிப்பு தொட்டியில் இருந்த ஆற்று மணல் அகற்றப்பட்டது.தற்போது வரை சுத்திகரிப்பு தொட்டியில் ஆற்று மணல் நிரப்பப்படாமல் உள்ளதால், சுத்திகரிப்பு செய்யப்படாமல் வினியோகம் செய்யப்படும் உவர்ப்புத் தன்மை உடைய தண்ணீரை குடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சுத்திகரிப்பு தொட்டியில் ஆற்று மணல் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ