உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை சிற்ப பகுதிகளில் 360 டிகிரி செல்பி எடுக்க வசதி

மாமல்லை சிற்ப பகுதிகளில் 360 டிகிரி செல்பி எடுக்க வசதி

மாமல்லபுரம் : மாமல்லபுரம் சிற்ப பகுதிகளில், சுற்றுலா பயணியர் 360 டிகிரியில், 'செல்பி' வீடியோ எடுத்துக்கொள்ள, தன்னார்வ நிறுவனம் சார்பில் சுழலும் சாதனம் வழங்கப்பட்டுள்ளது.பல்லவர் காலத்தை சேர்ந்த கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, பிற குடைவரைகளை, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் ரசிக்கின்றனர்.பெரும்பாலான பயணி யர் மொபைல் போன் வைத்திருக்கும் நிலையில், அவரவர் விருப்பத்திற்கேற்ப, சிற்பங்களை பலவிதகோணங்களில் படம் எடுத்து மகிழ்கின்றனர்.தாங்கள் சுற்றுலாவந்ததன் நினைவாக, சிற்பபின்னணியில், ஆர்வத்துடன் தங்களை 'செல்பி' படமும் எடுத்து செல்கின்றனர்.தற்போது, 360 டிகிரி சுழன்று, 'செல்பி' வீடியோ எடுக்கும் சாதனம் அறிமுகமாகி, பல நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.இச்சாதனத்தை கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய இடங்களில், 'ஹேண்ட் இன் ஹேண்ட்' தன்னார்வ நிறுவனம் தொல்லியல் துறையிடம் அளித்துள்ளது.அந்த சாதனத்திற்கு மின் இணைப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து, பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவரப்படும்என, தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ