உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போலி பாஸ்போர்ட் ஏஜன்ட் சிக்கினார்

போலி பாஸ்போர்ட் ஏஜன்ட் சிக்கினார்

சென்னை : சென்னை விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர், மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.அதில், இந்தியாவைச் சேர்ந்த ஹமீது முஸ்தபா, 47, என்பவர் போலி ஆவணங்கள் வாயிலாக, தன் பிறந்த தேதியை மாற்றி இந்தியா பாஸ்போர்ட் பெற்று மலேஷியாவிற்கு செல்வதற்கு முயன்றார்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டு இருந்தார். விசாரித்த போலீசார் ஹமீது முஸ்தபாவை கடந்தாண்டு, ஆக., 30ம் தேதி கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, 'வெல்கம் டிராவல்ஸ்' உரிமையாளர் ஹாஜா ெஷரிப் என்பவரை கடந்தாண்டு, செப்., 14ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், ஏஜன்ட்டாக செயல்பட்ட திருச்சியைச் சேர்ந்த சுரேஷ்குமார், 44, என்பவரை நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை