மேலும் செய்திகள்
திருவடிசூலம் சாலையை சீரமைக்க கோரிக்கை
3 hour(s) ago
குட்டையில் விழுந்த போதை வாலிபர் மீட்பு
3 hour(s) ago
கான்கிரீட் சாலை பணி விறுவிறு
3 hour(s) ago
சித்தாமூர் : சித்தாமூர் அருகே மதுராபுதுார் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயமே கிராமத்தின் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு 1,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 2014ம் ஆண்டு ஏரி உபரிநீர் கால்வாயில், 8 மீட்டர் நீளத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டது.இதனால் ,தடுப்பணையில் தண்ணீர் தேங்கி, அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக உயர துவங்கியது. முறையான பராமரிப்பு இன்றி தடுப்பணை நாளடைவில் பழுதடைந்ததால், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் வீணாகி வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago