உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஒரத்தி பகுதி விவசாயிகள் வெண்டை சாகுபடியில் தீவிரம்

ஒரத்தி பகுதி விவசாயிகள் வெண்டை சாகுபடியில் தீவிரம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த ஒரத்தி, வடமணிப்பாக்கம், கிளியா நகர், ஓட்டக்கோவில், ராமாபுரம், களத்துார், கீழ் அத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், தோட்டக்கலை பயிரான வெண்டைக்காய் சாகுபடி செய்வதில், விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், தற்போது புஞ்சை நிலப்பரப்பில் கத்திரிக்காய், வெண்டை, பாகற்காய், புடலை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களான காய்கறிகளை, பருவத்திற்கு ஏற்றவாறு பயிரிட்டு வருகின்றனர். தற்போது கோடைக்காலம் என்பதால், சொட்டுநீர் பாசனம் வாயிலாக, வெண்டைக்காய், கத்திரிக்காய் பயிரிட்டு வருகின்றனர்.அறுவடை செய்யப்படும் காய்கறிகள், வாகனங்கள் வாயிலாக, தாம்பரம் மற்றும் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.இதனால், கோடைக் காலத்தில் ஓரளவு கூடுதல் வருமானம் கிடைப்பதால், வெண்டை சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ