உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தெர்மாகோல் மறுசுழற்சி மையத்தில் தீ விபத்து

தெர்மாகோல் மறுசுழற்சி மையத்தில் தீ விபத்து

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சி அருகே உள்ள செங்கண்மால் கிராமத்தில், தனியார் தெர்மாகோல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யும் மையம் உள்ளது.நேற்று, இந்த மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், அப்பகுதி முழுதும் புகைமூட்டம் காணப்பட்டது. தகவல் அறிந்து வந்த சிறுசேரி மற்றும் திருப்போரூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இங்கு, 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை