உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவில் அருகில் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து

சிங்கபெருமாள் கோவில் அருகில் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த வி.ஐ.பி., நகரில், பாபு என்பவர் சமையல் எண்ணெய் கிடங்கு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல கிடங்கை பூட்டி விட்டு சென்ற நிலையில், நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது.இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், மறைமலை நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.இதில், 10,000 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காட்டன் பெட்டிகள் எரிந்தன. விரைவாக செயல்பட்ட தீணையணைப்பு வீரர்களால், 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு, பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக மீட்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், திருக்கச்சூர் பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டு இருந்த தனியார் தொழிற்சாலை கழிவுகளுக்கு, நேற்று காலை மர்ம நபர்கள் தீ வைத்தனர்.இதில் இருந்து வெளியேறிய புகையால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மூச்சுவிட சிரமப்பட்டனர். பொதுமக்கள் அளித்த தகவலின்படி, மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ