மேலும் செய்திகள்
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
3 hour(s) ago
தெருவில் கிடந்த மோதிரம் போலீசில் ஒப்படைத்த மாணவர்
6 hour(s) ago
பிசியோதெரபி மருத்துவ முகாம்
6 hour(s) ago
சென்னை:தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் ஹரன்சந்த் ஸ்ரீதர், 23. இவர், 'ஊபர்' தனியார் வாடகை கார் நிறுவனத்தில், ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.இவரது, மாருதி வேகனார் காரில் கடந்த 24ம் தேதி அதிகாலை 3:00 மணி அளவில், கொடுங்கையூரில் இருந்து, நான்கு சிறுவர்கள் சவாரி ஏறியுள்ளனர். அவர்கள் செல்ல வேண்டிய மாதரவத்திற்கு, ஓட்டுனர் ஹரன்சந்த் ஸ்ரீதர் காரை இயக்கியுள்ளார்.கார், மாதவரம் தபால் பெட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, காரின் பின்னால் இருந்த ஒருவன், திடீரென கார் ஓட்டுனரின் தலை மற்றும் தோளில் கத்தியால் பலமாக தாக்கினான். இதையடுத்து, நான்கு பேரும் சேர்ந்து ஓட்டுனரை மிரட்டி, 1,800 ரூபாய் பறித்தனர். மேலும், ஓட்டுனரின் மொபைல் போனில் 'சிம்' கார்டையும் பறித்தனர். அதன் பின், மாதவரம் பால்பண்ணை மைதானம் அருகே, அந்த நால்வரும் கீழே இறங்கி தப்பினர்.இது குறித்து, மாதவரம் போலீசார் விசாரித்தனர். இதில், மாதவரம், ரவி கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெரின் ஜோசப், 18, வின்சென் ஜோ, 18, கொடுங்கையூரை சேர்ந்த, 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஏழு மொபைல் போன்கள், 'ேஹாண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேற்கண்ட நால்வரும், கொடுங்கையூரில் குற்ற வழக்கில் சிக்கி கொடுங்கையூர் தனிப்படை போலீசாரால் தேடப்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
3 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago