| ADDED : ஜூலை 02, 2024 11:59 PM
திருப்போரூர்:திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறு திகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள்சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், திருப்போரூர் தாசில்தார், சங்க மாவட்ட துணைத் தலைவர் வெங்கட்ர மணன் தலைமைவகித்தார்.மண்டல துணை தாசில்தார் ஜீவிதா உட்பட, 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன்திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும்.அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும், காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணியிடங்கள், 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை கைவிட்டு, ஏற்கனவே இருந்த 25 சதவீதம் பணியிடங்கள் வழங்க வேண்டும் உட்பட எட்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.