உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆட்டோ மோதி காவலாளி பலி

ஆட்டோ மோதி காவலாளி பலி

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த பரமேஸ்வரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதகிரி 70; வாலோடை கிராமம், அணைக்கட்டு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வாட்ச்மேன் வேலை செய்து வந்தார்.வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு, தனது சைக்கிளில் வேலைக்கு சென்றார். அயப்பாக்கம் அருகே சாலை வளைவு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லோடு ஆட்டோ மோதியதில், பலத்த காயமடைந்தார்.இதில், வேதகிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை