உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மருத்துவமனை கட்டட பணி வேகம் இந்தாண்டுக்குள் திறக்க முடிவு

மருத்துவமனை கட்டட பணி வேகம் இந்தாண்டுக்குள் திறக்க முடிவு

குரோம்பேட்டை:குரோம்பேட்டையில், 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் மாவட்ட மருத்துவமனை கட்டட பணி வேகமாக நடைபெற்று வருவதால், இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, அரசு தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. தென்சென்னையில் உள்ள, ஒரே அரசு மருத்துவமனை இது தான்.இதைவிட்டால், செங்கல்பட்டு அல்லது சென்னைக்கு தான் செல்ல வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, புதிதாக செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்ட போது, குரோம்பேட்டை தாலுகா மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக உயர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இப்படி செய்தால் பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லுார், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களை சேர்ந்த மக்கள் பயனடைவர் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.இதையடுத்து, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி, கடந்த 2021 அக்டோபரில் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையை நவீனமயமாக்க, 110 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.இதற்காக, தாம்பரம் சானடோரியத்தில், சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில், ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 2023 பிப்., 28ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் இப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கின.ஒன்றரை ஆண்டில் இப்பணியை முடித்து ஒப்படைப்பதாக, பொதுப்பணித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்க்க முடியாத அளவிற்கு பணிகள் வேகமெடுத்து, கட்டடம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.தற்போது, 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேகம் இப்படியே தொடர்ந்தால், இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் முடிந்து, மருத்துவமனையை பயன்பாட்டிற்கு திறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என்னென்ன வசதிகள்...

* 500 படுக்கை* தனியாக ஓ.பி., பிளாக்* எம்.ஆர்.ஐ., 'ஸ்கேன்'* பார்க்கிங் பகுதி* கண், மூக்கு, காது, தொண்டை அறுவை சிகிச்சை அரங்கு* தீக்காயம் வார்டு* தோல், எலும்பு முறிவு, மனநலம் பிரிவு* பொது அறுவை சிகிச்சை பிரிவு* ஆயுர்வேத சிகிச்சை பிரிவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி