துப்பாக்கி கிடைத்தது எப்படி? பாம் சரவணனிடம் விசாரணை!
சென்னை, கூலிப்படை கும்பல் தலைவன் ரவுடி பாம் சரவணனிடம், துப்பாக்கிகள் கிடைத்தது எப்படி என, போலீசார் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.கடந்தாண்டு மார்ச்சில், சென்னை திருமங்கலம் பகுதியில், ஹோட்டல் ஒன்றில் பதுங்கி இருந்த, புளியந்தோப்பை சேர்ந்த பாம் சரவணன், 41, உள்ளிட்ட, 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, நான்கு துப்பாக்கிகள், 84 தோட்டாக்கள், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.செங்குன்றத்தை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரை தீர்த்துக்கட்ட, ஹோட்டலில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. திருமங்கலம் போலீசார் ரவுடி பாம் சரவணனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.அப்போது, 'துாத்துக்குடியை சேர்ந்த தன் கூட்டாளிதம்பிராஜ் தான், பீஹார் மாநிலத்தில் இருந்து துப்பாக்கிகளை வாங்கி வந்து கொடுத்தார்' என,சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.