உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரியில் கொசு மருந்து தெளிக்கும் பணி துவக்கம்

கூடுவாஞ்சேரியில் கொசு மருந்து தெளிக்கும் பணி துவக்கம்

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில், மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், தற்போது பெய்த மழையில், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.மேலும், மழை நீர் சாலையில் தேங்கி, அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதிவாசிகள் சிரமமடைந்தனர். இது குறித்து, சமூக ஆர்வலர்கள் நகராட்சி தலைவர் கார்த்திக், கமிஷனர் தாமோதரன் ஆகியோருக்கு புகார் மனு அளித்தனர்.அதனை தொடர்ந்து, கமிஷனர் உத்தரவுப்படி, சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் தலைமையில், நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், கொசு மருந்து தெளிக்கும் பணி துவங்கப்பட்டது.நேற்று, கூடுவாஞ்சேரி விஸ்வநாதபுரம் மூன்றாவது மற்றும் நான்காவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், கொசு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை