உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சீரழிந்த செங்காடு சாலை சீரமைக்க வலியுறுத்தல்

சீரழிந்த செங்காடு சாலை சீரமைக்க வலியுறுத்தல்

திருப்போரூர் : திருப்போரூர்- - இள்ளலுார் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் செங்காடு சாலை, 3 கி.மீ., துாரம் உடையது.இதில், இரண்டு கி.மீ., சாலை மேம்படுத்தப்பட்டது. ஒரு கி.மீ., வனத்துறை சாலை மேம்படுத்தப்படாமல், குண்டும் குழியுமாக காணப்படுகிறது.இதனால், மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வோர் மற்றும் கோமா நகர், தையூர், காயார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர்.எனவே, இச்சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை