உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சர்வதேச பிடே ரேட்டிங் செஸ்: தமிழக வீரர் ஷியாம் சாம்பியன்

சர்வதேச பிடே ரேட்டிங் செஸ்: தமிழக வீரர் ஷியாம் சாம்பியன்

சென்னை : டாக்டர் கே.சி.ஜி., வர்கிஷ் நினைவு கோப்பைக்கான சர்வதேச ஓபன் பிடே ரேட்டிங் செஸ் போட்டி, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் உள்ள கே.சி.ஜி., கல்லுாரி வளாகத்தில், நேற்று மாலை நிறைவடைந்தது.போட்டியில், நாடு முழுதும் இருந்து, 533 பேர் ஆர்வமுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். போட்டிகள், தொடர்ந்து ஐந்து நாட்கள், தினமும் இரண்டு சுற்றுகள் என, மொத்தம் ஒன்பது சுற்றுகள் வீதம் நடந்தன.நேற்று மதியம் நடந்த ஒன்பதாவது சுற்று முடிவில், தமிழக வீரர் ஷியாம் 8.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து, 40,000 ரூபாய் ரொக்க பரிசும், கோப்பையும் வென்றார்.அவரை தொடர்ந்து, தமிழக வீரர் சரவணன் எட்டு புள்ளிகள் பெற்று, இரண்டாம் பரிசாக 30,000 ரூபாயை வென்றார்.தமிழக வீரர்கள் விஜய் ஸ்ரீராம் மற்றும் தினேஷ் ராஜன் ஆகியோர், தலா 7.5 பள்ளிகள் பெற்று, முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களை வென்றனர்.இவர்களை தொடர்ந்து 16 தமிழக வீரர்கள் தலா 7 புள்ளிகள் பெற்று, 10,000 முதல் 3,000 ரூபாய் வரை முறையே பரிசுகளை வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை