உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினராக அழைப்பு

மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினராக அழைப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் பதவிக்கு, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில், கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புகுழு அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, இக்குழுவின் சார்பில் கூட்டம் நடத்த வேண்டும்.மாவட்டத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியுடன், இக்குழு உறுப்பினர்களின் மூன்றாண்டு பதவிகாலம் முடிவடைந்தது.அதனால், புதிதாக குழு உறுப்பினர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், நேரடியாகவோ அல்லது தபால் வாயிலாகவோ, வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை