உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடைவரை மண்டபத்தில் விரிசல் பாரம்பரிய முறையில் சீரமைக்க முடிவு

குடைவரை மண்டபத்தில் விரிசல் பாரம்பரிய முறையில் சீரமைக்க முடிவு

மாமல்லபுரம்:மாமல்லபுரம் குடைவரை மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை, தொல்லியல் துறை பாரம்பரிய முறையில் சீரமைக்க முடிவெடுத்துள்ளது.கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு, பல்லவர் கால சிற்பங்கள், குடைவரைகள் ஆகியவை மாமல்லபுரத்தில் உள்ளன. தொல்லியல் துறை பராமரித்து பாதுகாக்கின்றன.அவற்றில் துாசு, பறவை எச்சம், வாகன புகை படிந்து பொலிவிழக்கும் நிலையில், தொல்லியல் துறை, அவ்வப்போது மாசுக்களை நீக்கி துாய்மைப்படுத்துகிறது.இது ஒருபுறமிருக்க, குடைவரைகளில் இயற்கையாகவே விரிசலும் ஏற்படுகிறது. அர்ஜுனன் தபசு சிற்பத்தை ஒட்டியுள்ள பஞ்ச பாண்டவர் குடைவரை குன்றின் மேற்பரப்பில், பல ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விரிசல், குடைவரையின் உட்புறம் வரை நீண்டுள்ளது. கனமழையின் போது, குடைவரையின் உள்ளே மழைநீர் கசிகிறது.இந்நிலையில், விரிசலை சீரமைக்க, தொல்லியல் துறை முடிவெடுத்துள்ளது. அத்துறையின் சென்னை வட்ட பொறியாளர் சத்யன், மாமல்லபுரம் முதுநிலை பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர், குடைவரையின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை அளவிட்டு, வடிவமைப்பு தோற்றத்தை நேற்று பதிவு செய்தனர்.இது குறித்து, தொல்லியல் துறையினர் கூறியதாவது:பஞ்சபாண்டவர் குடைவரையில், இயற்கையான விரிசல் ஏற்பட்டுள்ளது. அதை சீரமைக்க, நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.எனவே, குடைவரையை அளவிட்டு, தலைமையிடம் பரிந்துரைக்கிறோம். நிபுணர் குழுவினர் பார்வையிட்டு, பாரம்பரிய முறையில் எவ்வாறு சீரமைப்பது என திட்டமிடுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ