உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேலையூரில் நகை திருட்டு

சேலையூரில் நகை திருட்டு

சேலையூர்:சேலத்தைச் சேர்ந்தவர் சேகர், 38. கோவிலாஞ்சேரி, கங்கையம்மன் கோவில் தெருவில், குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல், கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர்.மாலை 6:00 மணிக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே, பீரோவில் இருந்த இரண்டு சவரன் செயின், ஒரு சவரன் தோடு என, மூன்று சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இத்திருட்டு குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை