உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த மின்னல் சித்தாமூர் ஊராட்சிக்குட்பட்ட கீழ்பட்டு கிராமத்தில் உள்ள பழமையான வினை தீர்க்கும் விநாயகர் கோவில் உள்ளது.கோவில் புணரமைப்பு பணிகள் செய்ய ஊர் விழா குழுவினர்கள் முடிவெடுத்து, பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் அனைத்தும் முடிந்து, நேற்று முன்தினம் பந்தக்கால் நடப்பட்டது.மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, நவகிரக பூஜை, தனபூஜையுடன் விழா தொடங்கியது. பின், இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் நடந்தன.நேற்று நான்காம் கால யாகசாலை பூஜையில், வேத மந்திரங்கள் முழங்க, காலை 9:00 மணிக்கு, மேள தாளங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, ஜீர்ணோதாரண, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின், கோபுர கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி