உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி

சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி

செங்கல்பட்டு:சிங்கபெருமாள் கோவில் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில், மகளிர் சுயஉதவிகுழுவினர் தொழில் துவங்க, நேற்று கடன் உதவி வழங்கப்பட்டது.செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் நகர கூட்டுறவு கடன்சங்கம் சார்பில், டாம்கோ, டாப்செட்கோ மற்றும் தாட்கோ கடன் மேளா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் தலைமையில் நேற்று நடந்தது.இதில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுகழகத்தில் கடன் வழங்கக்கோரி, நுாறு பேர் விண்ணப்பித்தனர்.இந்த கடன் சங்கத்தின் வாயிலாக, இரண்டு மகளிர் சுயஉதவி குழுனர் தொழில் துவங்க, தலா 12 லட்சம் ரூபாய் என, 24 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வேலாயுதம், துணைப்பதிவாளர் உமாசங்கரி,கண்காணிப்பாளர்பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்