உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சோத்துப்பாக்கம் ஊராட்சி தலைவரை தாக்கியவர் கைது

சோத்துப்பாக்கம் ஊராட்சி தலைவரை தாக்கியவர் கைது

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் ஊராட்சி தலைவராக ஸ்ரீதர், 62, என்பவர் உள்ளார்.இவர், நேற்று முன்தினம், சோத்துப்பாக்கம் திருவள்ளுவர் நகரில், ஊராட்சிக்கு சொந்தமான பகுதியில் நடந்த சாலை அமைக்கும் பணியை பார்வையிட சென்றார்.அப்போது, ஜூலியஸ் சீசர், 51, என்பவர், அவருக்கு சொந்தமான காரை, வீட்டின் முன், சாலையிலேயே நிறுத்தி வைத்திருந்துள்ளார்.சாலைப் பணிக்கு இடையூறாக இருந்த காரை, வேறு பகுதியில் நிறுத்துமாறு ஸ்ரீதர் கூறியுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது, ஊராட்சி தலைவர் ஸ்ரீதரை, ஜூலியஸ் சீசர் அசிங்கமாக பேசி, கைகளால் தாக்கியுள்ளார்.இதில், காயமடைந்த ஸ்ரீதரை மீட்ட அப்பகுதிவாசிகள், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, மேல்மருவத்துார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.மருத்துவமனையில் இருந்து மேல்மருவத்துார் போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின்படி, வழக்கு பதிவு செய்த போலீசார், ஜூலியஸ் சீசரை நேற்று கைது செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை